WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, April 15, 2026

‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.


 '​டான்செட்', 'சீட்​டா'' நுழைவுத்​ தேர்​வுக்கு ஆன்​லைனில் விண்​ணப்​பிப்​ப​தற்​கான கடைசி தேதி ஏப்​ரல் 15 வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ள​தாக அண்ணா பல்​கலைக்​கழகம் அறி​வித்​துள்​ளது.

அரசு, அரசு உதவி மற்​றும் தனி​யார் கல்​லூரி​களில் உள்ள எம்​பிஏ, எம்​சிஏ ஆகிய படிப்​பு​களில் சேர தமிழ்​நாடு பொது நுழைவுத் தேர்​விலும் (டான்​செட்) எம்இ, எம்​டெக், எம்​பிளான், எம்​ஆர்க் ஆகிய முது​நிலை பொறி​யியல் படிப்​பு​களில் சேரு​வதற்கு பொது பொறி​யியல் நுழைவுத் ​தேர்​விலும் (சீட்​டா) தேர்ச்சி பெற வேண்​டும்.

இந்த தேர்​வு​களை தமிழக அரசு சார்​பில் அண்ணா பல்​கலைக்​கழகம் நடத்​துகிறது. வரும் கல்வி ஆண்டு (2026-27) மாணவர் சேர்க்​கைக்​கான டான்​செட், சீட்டா நுழைவுத் தேர்​வு​களுக்​கான அறி​விப்பு கடந்த மார்ச் 16-ம் தேதி வெளி​யிடப்​பட்டு அன்​றைய தினமே ஆன்​லைன் விண்​ணப்​பப் பதிவு தொடங்​கியது.

ஏப்​ரல் 15 கடைசி தேதி

விண்​ணப்​பிக்க கடைசி நாள் ஏப்​ரல் 10-ம் தேதி என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இந்​நிலை​யில், மாணவர்​களின் நலனை கருத்​தில்​கொண்டு கடைசி தேதி ஏப்​ரல் 15 வரை நீட்​டிக்​கப்​பட்​டிருப்​ப​தாக அண்ணா பல்​கலைக்​கழகம் தெரி​வித்​துள்​ளது.

எனவே, டான்​செட், சீட்டா நுழைவுத்​ தேர்​வெழுத விரும்​பும் மாணவர்​கள் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் இணை​யதளத்தை (www.annauniv.edu) பயன்​படுத்தி ஏப்​ரல் 15 வரை விண்​ணப்​பிக்​கலாம்.

ஏற்​கனவே அறிவிக்​கப்​பட்​டபடி, டான்செட் நுழைவுத்​தேர்வு மே 9-ம் தேதி​யும், சீட்டா நுழைவுத்​தேர்வு மே 10-ம் தேதி​யும்​ நடை​பெற உள்​ளன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.