அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கு வி்ண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 1 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மாநிலம் முழுவதும் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளில் விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரத்து 034 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நிர்ணயிக்கப்பட்டுள்ள கடைசி தேதிக்குள் விண்ணபிக்கத் தவறும் மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அவர்கள் ஜூன் 1-க்கு பிறகும் விண்ணப்பிக்கலாம் என்று அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை வழிகாட்டுதல் தொடர்பான விவரங்களை www.tngasa.in என்ற இணைய தளத்தில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.