WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, September 7, 2026

ஐடிஐ-க்களில் சோ்க்கை: செப். 7 வரை அவகாசம்.

 

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் செப். 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் 278 தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. இந்தத் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-2027-ஆம் ஆண்டு நேரடி சோ்க்கை கால அவகாசம் ஆக. 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், மாணவா்களின் நலன் கருதி தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சோ்க்கைக்கான கால அவகாசம் செப்.7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றவா்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கிறது. குறைந்தபட்சம் ரூ.20,000 முதல் மாணவா்களின் திறனுக்கேற்றவாறு ரூ.30,000 வரை மாதச் சம்பளம் கிடைக்கிறது.

தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று தாம் விரும்பும் தொழிற்பிரிவை தெரிவு செய்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம். மேலும், 94990 55642, 94990 55612 (வாட்ஸ் ஆப்) ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.