WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, June 27, 2014

ஒரே நாளில் வங்கி, குரூப் 2 தேர்வுகள்

தமிழகத்தில் ஜூன் 29 அன்று வங்கி மற்றும் டி.என்.பி.எஸ்.சி., 'குரூப்' 2 தேர்வு நடப்பதால், எந்த தேர்வை எழுதுவது எனத் தெரியாமல் பட்டதாரிகள் தவிக்கின்றனர்.தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 2800 உதவியாளர் பணிக்கு, டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் 2' எழுத்துத்தேர்வு, ஜூன் 29 காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.வங்கித் தேர்வு: பாரத ஸ்டேட் வங்கிக்கு இந்திய அளவில், 1897 'புரபேஷனரி ஆபீசர்' பணியிடங்களுக்கான எழுத்து தேர்வும், ஜூன் 29 காலை, பிற்பகலில் சென்னை உட்பட 14 நகரங்களில் நடக்கிறது. ஒரே நாளில் வங்கி, 'குரூப் 2' தேர்வுகள் நடப்பதால் இரண்டிற்கும் more news at www. .Kalvikkuyil.blogspot.Com விண்ணப்பித்தவர்கள் எந்ததேர்விற்கு செல்வது என புரியாமல் தவிக்கின்றனர். போட்டித் தேர்வு பயிற்சி மைய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:வங்கித் தேர்வு இந்தியா முழுவதும் நடக்கும். வங்கி, யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., தேர்வு தேதியை மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கும். மாநில அரசுப்பணிகளுக்கு தேர்வு நடத்தும் போது, மத்திய அரசு தேர்வு இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். டி.என்.பி.எஸ்.சி.,யில் இதை கவனிக்காமல் அறிவிப்பதால் பட்டதாரிகள் சிக்கலில் தவிக்கின்றனர். 'குரூப் 2' நேரடி உதவியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றால் 'மெயின்' தேர்வு, நேர்காணல் இன்றி வேலை கிடைக்கும். ஆனால் வங்கித் தேர்வில் தவறான விடைக்கு 'மைனஸ்' மதிப்பெண் போடுவர். இதனால் பெரும்பாலான பட்டதாரிகள் 'குரூப் 2' தேர்வைத்தான் எழுதுவர். வங்கி தேர்வுக்கு மட்டுமே தயாராகும் பட்டதாரிகள் மட்டுமே அதை எழுதுவர். இதனால் 'குரூப் 2' தேர்விற்கு கடும் போட்டி இருக்கும்.இவ்வாறு கூறினார்.

3 comments:

  1. When will publish PGTRB Final list pls update sir

    ReplyDelete
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.