WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, June 29, 2014

டி.இ.டி., ல் தேர்ச்சி பெற்றவர்களை பணியமர்த்துவதில் தாமதம் !

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, 5 மாதங்கள் கடந்த பிறகும் பணி நியமனம் செய்யாதது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரையைச் சேர்ந்த ராஜகுமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு இவ்வாறு உத்தரவிட்டார்.
மனுவில், நான் எம்.எஸ்சி., எம்.எட் படித்துள்ளேன். கடந்த 2013 ஆக.18-ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். 2014 ஜன. 24-ல் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டேன். தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் காலி இடங்களில் பணி அமர்த்தப்படுவர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. ஏராளமான காலி பணியிடங்கள் இருந்த போதிலும், இதுவரை யாருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளை சந்தித்து விவரம் கேட்டேன். அப்போது, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களைக் கொண்டு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், அதுதொடர்பாக தனித்தனியாக கடிதம் அனுப்பப்படும் என்றும் தெரிவித்தனர். சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 5 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை பணி நியமன உத்தரவு வழங்கப்படாததால், தேர்வானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, பணி நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும். எனக்காக, ஒரு பணியிடத்தை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இம் மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, மனுவுக்கு பள்ளிக் கல்வித் துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

12 comments:

  1. Sir Nan pap 1 la pass ahi job kaha waiting.july la tet final list sure ah varuma?

    ReplyDelete
  2. Pls think positive friend all are finishig in july month

    ReplyDelete
  3. which list will be released first tet or pg?

    ReplyDelete
  4. July la final list vandha romba sandhosham sir.

    ReplyDelete
  5. which is the best option to choose ..BT or PG assistant

    ReplyDelete
  6. Pg is a respective jop compare bt its my think

    ReplyDelete
  7. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 74 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் யூஜிசி போல ஆன்லைனில் தகுதிச்சான்றிதழ் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. Thakuthi sandrai eppadi koduthal enna?.posting
      seekkiram koduthal sari.

      Delete
  8. MY PREDICTION OF TNTET 2013 CHENNAI HIGH COURT VERDICT:

    (1). NO PRIORITY FOR ABOVE 90. There is no discrimination between "below 90 and above 90". All are treated equally.

    (2). THE COURT CAN NOT ORDER THE GOVERNMENT TO GIVE "Weightage for Seniority and Experience". That is upto government's policy decision.

    (3). The percentage of weightage among 12, Degree, B.Ed and TET can be changed by the government to satisfy the senior candidates. Example: 70+15+15 = 100 (+12 is removed).

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.