ஒருங்கிணைந்த சார்நிலை பணிகளுக்கான தேர்வு 2011 நவம்பர் 4ம் தேதி நடந்தது. அந்த தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களில் நேர்காணல் அல்லாத பதவிகளுக்கு 3 கட்டமாக கவுன்சலிங் நடந்தது. மீதம் உள்ள 276 காலிப் பணியிடங்களுக்கு பணியாளர்களை தெரிவு செய்ய 4ம் கட்டமாக சான்று சரிபார்ப்பு மற்றும் கவுன்சலிங் நடத்த டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது. அதற்காக 632 பேரின் தெரிவு செய்யப்பட்ட பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு பிரிவை சாராதவர்களுக்கு 14ம் தேதி சான்று சரிபார்ப்பு நடக்கிறது. 15ம் தேதி கவுன்சலிங் நடக்கிறது. அதேபோல, ஆதரவற்ற விதவை, மாற்றுத் திறனாளிகளுக்கு 15ம் தேதி சான்று சரிபார்ப்பும், 16ம் தேதி கவுன்சலிங்கும் நடக்கிறது. முன்னாள் ராணுவத்தினருக்கு 16ம் தேதி சான்று சரிபார்ப்பும், 17ம் தேதி கவுன்சலிங்கும் நடக்கிறது.
சான்று சரிபார்ப்பு, கவுன்சலிங் ஆகியவற்றுக்கு தகுதி உள்ளோருக்கு அழைப்புக் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் தவறாக இருக்கும்பட்சத்தில் கவுன்சலிங்கில் பங்கேற்க முடியாது. சான்று சரிபார்ப்பு, கவுன்சலிங்கில் பங்கேற்க தவறினால் அவர்களுக்கு திரும்பவும் வாய்ப்பு கிடைக்காது. எண் 3, பிரேசர் பாலச் சாலை, சென்னை-3 என்ற முகவரியில் டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் கவுன்சலிங் நடைபெறும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.