# பிளாக் டியுலிங் என்றழைக்கப்படும் கறுப்பு ரோஜாவின் நிறம் கறுப்பு. இது அல்லி வகையைச் சேர்ந்தது.
# பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர்வது குறிஞ்சி மலர் என்பது உங்களுக்கு தெரியும் அல்லவா? ஆனால், 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அதிசய மலர் ஒன்று இருக்கிறது. அதன் பெயர் காக்டஸ். இது இந்தியப் பெருங்கடலில் ரீயூனியன் தீவில் காணப்படுகின்றன.
# ‘பீ ஆர்கிட்’ என்றழைக்கப்படும் பூச்செடியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் தேனீக்களைப் போல் தோற்றமளிக்கும்.
# சோவியத் ரஷ்யாவில் காபர்வோஸ்க் என்ற இடத்திலுள்ள குகைகளில் வித்தியாசமான தாமரை மலர்கள் பூத்து குலுங்குகின்றன. காற்றடிக்கும்போது இந்த மலர்கள் வண்ணம் மாறுகின்றன. முதலில் நீல வண்ணமாகி, சிவப்பாக மாறிவிடுகின்றன. மாலையில் இவை கறுப்பு வண்ணத்தில் காட்சி அளிக்கும்.
# அசெளரா ரூப்ரா என்ற நாய்க்குடை பூ ஆம்பல் மலர் போலவே சிரிக்கும். அதுமட்டுமல்ல, ஆம்பலைப் போலவே தோற்றமளிக்கும்.
# ஜோபி வீட் என்ற ஒரு சிவப்பிந்திய மந்திரவாதியின் பெயரைத் தாங்கியுள்ள இச்செடி பார்ப்பதற்கு அச்சமூட்டுவதாக காணப்படும்.
# நைகிரிட்டல்லா ரூப்ரா என்ற பெயருடைய செடி ஐரோப்பாவில் உள்ளது. இதன் பூக்கள் சாக்லேட்டின் மணத்தையும் நிறத்தையும் கொண்டவை.
# வாகை ஒரு விந்தையான மலர். மாலையில் மலரும் இந்தப் பூ நள்ளிரவில் பிஞ்சாகி சில விநாடிகளில் வளர்ந்து காலையிலேயே அது காயாகிவிடும்.
# ஜாவா மலைப்பகுதியில் காணப்படும் ராயல் கெளஸ்லிப் என்ற பூச்செடி தோன்றினால் அது எரிமலை வெடிப்பதைக் குறிக்கும் அறிகுறியாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.