தேனி, ஜூலை.10– இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேயிலை, காபி, ஏலக்காய்
தோட்டங்களில் தமிழகத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் வேலை பார்த்து வருகின்றனர்.
இது மட்டுமின்றி அங்குள்ள ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்களிலும் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் அங்குள்ள தமிழ் வழிப்பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
தமிழ் வழி கல்வி கற்கும் மாணவ–மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து கேரள அரசு கூடுதல் பள்ளிகளை கட்டியது.
இருந்தபோதும் ஆயிரக்கணக்கான தமிழ் வழிக்கல்வி மாணவ–மாணவிகளுக்கு 800 நிரந்தர ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.
பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு தின ஊதிய அடிப்படையில் 1300 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கேரள அரசு தற்காலிக ஆசிரியர்கள் 1300 பேரையும் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது. இதற்கான உத்தரவை இடுக்கி மாவட்ட கல்வி அலுவலர் அனிலா ஜார்ஜ் அந்த ஆசிரியர்களுக்கு நேற்று வழங்கினார்.
இதனால் அந்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கேரள அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
ஏற்கனவே தமிழ் பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளின் தேர்ச்சி சதவிகிதம் குறைவாக உள்ளது.
இந்நிலையில் எங்களையும் பணியில் இருந்து நீக்கியுள்ளதால் அவர்களின் கல்வி நிலை கேள்விக்குறியாவதுடன் எங்களது வாழ்வாதாரமும் பாதிப்படைகின்றது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.