சென்னை, ஜூலை. 10–
இதைத் தொடர்ந்து மறைந்த மத்திய மந்திரி கோபிநாத் முண்டே மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபா நாயகர் வாசித்தார். அப்போது அவர் மராட்டிய மாநிலத்தில் எம்.எல்.ஏ. வும், எதிர்க்கட்சி தலைவராகவும், துணை முதல்– மந்திரியாகவும், பின்னர் பாராளுமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராகவும் பதவி வகித்ததை குறிப்பிட்டார். அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அனைத்து உறுப்பினர்களும் சிறிது நேரம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
அதன் பிறகு காஞ்சீபுரம் மாவட்டம் மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 61 பேர் உயிரிழந்தது பற்றிய இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் வாசித்தார். அப்போது தனியாரால் கட்டப்பட்ட இந்த 11 மாடி கட்டிடம் 28.6.14 அன்று இடிந்து 61 பேர் உயிரிழந்த சம்பவத்தால் இந்த பேரவை அதிர்ச்சியும் ஆறாத்துயரமும் அடைகிறது.
சம்பவம் நடந்த இடத்துக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேரில் சென்று பார்வையிட்டு துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சமும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மேலும் ரூ. 5 லட்சமும் வழங்கினார். படுகாயம் அடைந்தவர்களையும் நேரில் பர்வையிட்டு அவர்களுக்கும் உதவி வழங்கி சிகிச்சை செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என்று அறிவித்துள்ளார்.
விபத்து குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ரெகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை இந்த சபை தெரிவிக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் அலமாதி கிராமத்தில் 6–7–14 அன்று தனியார் சேமிப்பு கிடங்கு மதில்சுவர் இடிந்து 11 பேர் உயிரிழந்த சம்பவத்தை அறிந்து இந்த சபை அதிர்ச்சியும் ஆற்றொண்னாத் துயரமும் அடைகிறது.
இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இறந்தவர்களுக்கு இந்த சபை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. இந்த விபத்துகளில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் உறுப்பினர்கள் ஒரு சில மணித்துளிகள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு சபாநாயகர் கூறினார். இதையடுத்து உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
இதையடுத்து இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சட்டசபை கூட்டத்தை 30 நிமிடங்கள் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இதையடுத்து கூட்டம் 30 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
ஜெயலலிதாவுக்கு வரவேற்பு
முதல் – அமைச்சர் ஜெயலலிதா காலை 9.52 மணிக்கு சட்டசபைக்கு வந்தார். அப்போது அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மேஜையை தட்டி அவரை வரவேற்றனர். கே.பி.முனுசாமிக்கு 4–வது வரிசையில் இடம் கே.பி.முனுசாமி அமைச்சராக இருந்தபோது முன் வரிசையில் அவருக்கு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது அமைச்சர் பதவியில் இல்லை. எனவே அவருக்கு 4–வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.