WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, July 21, 2014

குரூப் - 1 தேர்வு: 79 இடத்திற்கு 1.62 லட்சம் பேர் போட்டி

துணை கலெக்டர் உட்பட, 79 பணி இடங்களுக்காக, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப் - 1 முதல் நிலைத் தேர்வு நேற்று நடந்தது. இந்தத் தேர்வில், 1.62 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு மையங்களில், டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் கண்காணிப்பிலும் ஈடுபட்டனர்.

அறிவிப்பு:

தமிழகத்தில், துணை கலெக்டர் - 3; போலீஸ் டி.எஸ்.பி., - 33; வணிகவரித் துறை இணை ஆணையர் - 33 மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் - 10 பேர் என, 79 இடங்களுக்கான, குரூப் - 1 தேர்வு, நேற்று என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்திருந்தது.இதன்படி, சென்னையில், 108 மையங்கள் உட்பட, தமிழகம் முழுவதும், 557 மையங்களில், நேற்று தேர்வு நடந்தது.பட்டதாரிகள் மட்டுமின்றி, இன்ஜினியர், டாக்டர்கள் என, 1.62 லட்சம் பேர், ஆர்வமுடன் வந்து தேர்வு எழுதினர்.பல பெண்கள், கைக்குழந்தைகளுடன் தேர்வு மையங்களுக்கு வந்தனர். அவர்கள் கணவரிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு, தேர்வு மையத்திற்குச் சென்று, தேர்வு எழுதினர்.தேர்வு எழுதிய அனைவரும், தீவிர சோதனைக்கு பிறகே, தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். கால்குலேட்டர், மொபைல்போன் போன்றவை கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

தேர்வில் முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க, மாவட்டங்களில், துணை கலெக்டர்கள் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிரமாக,கண்காணிக்கப் பட்டது. சென்னை யில் மட்டும், டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் மேற்பார்வையில் தேர்வுகள் நடந்தன. சில மையங்களில் அதிரடி சோதனையும் நடந்தது.

பாதுகாப்பு:

டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்பிரமணியனும் (பொறுப்பு), சில தேர்வு மையங்களில் ஆய்வு செய்தார். அப்போது, தேர்வு கட்டுப்பாடு அதிகாரி ஷோபனாவும் உடன் சென்றிருந்தார். தேர்வு மையங்கள் முன், போலீஸ்பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.முதல் நிலை தேர்வில் வெற்றி பெறுவோருக்கு, அடுத்த கட்டமாக பிரதான தேர்வு நடத்தப்படும். இதில், பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், 79 பேர் தேர்வு செய்யப்படுவர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.