WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, July 12, 2014

10ம் வகுப்பு செய்முறை பயிற்சி அட்டவணை வெளியீடு!

கோவை:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அறிவியல்
பாடத்திற்கான செய்முறை பயிற்சி அட்டவணை, பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி பள்ளிகளில் படிக்கும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் பாடத்திற்கான செய்முறை பயிற்சி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், வேதியியல், இயற்பியல், உயிரியல் பாடப்பிரிவுகளில், ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டிய பகுதிகள், மாணவர்கள் பயிற்சி பெற வேண்டிய பகுதிகள் குறித்து, பள்ளி வாரியாக முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சிகளை, செப்டம்பர் மாதம் வரை முதல் பிரிவாகவும், டிசம்பர் வரை இரண்டாவது பிரிவாகவும் நடத்த, அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாடவாரியாக பயிற்சி அளிக்கப்பட்ட நாட்கள், மாணவர்கள் செய்முறை வகுப்புகளில் பங்கேற்ற நாட்கள் குறித்து, தலைமையாசிரியர்கள் கண்காணித்து, அறிக்கை அனுப்பவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி அறிவியல் பாட ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'செய்முறை பயிற்சிக்கான அட்டவணை, பள்ளிகளுக்கு வந்துள்ளது. இதில், இயற்பியல் பிரிவில், நான்கு தலைப்புகளுக்கான பயிற்சியில், ஆசிரியர்கள் செய்து காட்ட, ௧௯ வகுப்புகளும், மாணவர்கள் பயிற்சி பெற, ௫௬ வகுப்புகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல், வேதியியல் பிரிவில், ஐந்து தலைப்புகளுக்கான பயிற்சியில், ஆசிரியர்கள் செய்து காட்ட, ௨௮ வகுப்புகள், மாணவர்கள் பயிற்சி பெற, ௫௩ வகுப்புகளும், உயிரியலில், எட்டு தலைப்புகளில், ஆசிரியர்களுக்காக, ௧௦ வகுப்புகளும், மாணவர்கள் பயிற்சிக்காக, ௪௪ வகுப்புகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வகுப்புகளில், மாணவர்களது பயிற்சி தகவல்கள், அறிக்கைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது' என்றனர்.

7 comments:

  1. கல்விக்குயில் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்

    இன்று டி.இ.டி யில் கீ ஆன்சர் வழக்கின் தீர்ப்பு நகல் நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான லிங்க்

    http://judis.nic.in/judis_chennai/Judge_Result_Disp.asp?MyChk=49270


    அடுத்தது PGTRB வழக்குகள் தொடர்பான தீர்ப்பு நகல் விரைவில் எதிர்பார்க்கலாம்.

    ReplyDelete
  2. வரும் நாட்களில் Pg final list எதிர் பார்க்கலாமா.? அல்லது மறுமதிப்பிடு வாரமக இருக்குமா?

    ReplyDelete
  3. today trb office leave aa sir???... innaikku revaluation result varuma sir..??...

    ReplyDelete
    Replies
    1. ஏன் இந்த சந்தேகம் உங்களுக்கு

      சென்ற மறுமதிப்பீடு முடிவே சனிக்கிழமை (11-01-2014) தான் வந்தது மேடம்.

      டி.ஆர்.பிக்கு விடுமுறை எல்லாம் பார்க்க மாட்டாங்க மேடம். ..

      எப்போது வேண்டுமானாலும் முடிவை வெளியிடுவார்கள். .

      Delete
  4. sari.. parpom sir...ennathan pandrangannu(TRB)...

    ReplyDelete
  5. Yen sir ellarume TET ptthi mattum pesuranga.Nammai ellorum maranthuttangala?Namakku posting unda illaiya?

    ReplyDelete
    Replies
    1. போஸ்டிங் உறுதியா இருக்கு. ஆனா எப்ப வருமுனு தான் தெரியல மேடம்...



      Delete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.