கோவை:
மாநில நல்லாசிரியர் விருது பெற, விரும்பும் ஆசிரியர்கள், ஜூலை 16க்குள்
விண்ணப்பிக்குமாறு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரிடமும், தொடக்க, நடுநிலை பள்ளிகளில் பணிபுரிவோர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடமும், மெட்ரிக்., பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அந்தந்த மெட்ரிக்., பள்ளி ஆய்வாளர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை, பூர்த்தி செய்து, ஜூலை 16க்குள் ஒப்படைக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க, தலைமை ஆசிரியர்கள் 20 ஆண்டுகளும், ஆசிரியர், சிறப்பு ஆசிரியர்கள் குறைந்தது, 15 ஆண்டுகளும் பணியாற்றியிருக்க வேண்டும். 2013 செப்., 30 வரை, மறுநியமன காலம் இல்லாமல், பணி புரிந்திருக்க வேண்டும்.
நல்லாசிரியர் விருது பெற விரும்பும் ஆசிரியர்களிடமிருந்து, விண்ணப்பத்தை பெற்று, கல்வித்துறை இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்குமாறு, முதன்மை கல்வி அலுவலகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, கோவை மாவட்டத்தில், தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு, வட்டார உதவி கல்வி அலுவலர் வாயிலாக, தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, சுற்றறிக்கை வாயிலாக, தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான இறுதி பட்டியல் தயாரித்து, இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கும் பணி நடப்பதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.