WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, July 10, 2014

அரசுப் பணியாளர்களிலும் ”கலப்படம்” – போலிச் சான்றிதழுடன் 1800 அரசாங்க ஊழியர்கள்

இந்தியாவில் பணிபுரியும் அரசு ஊழியர்களில் முக்கால் பங்கினர் போலியான
சான்றிதழ்களை அளித்து பணிபுரிந்து வருகின்றனர் என்ற செய்தி அனைத்து தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளில் பணிபுரியும் இதுபோன்ற கருப்பு ஆடுகள்தான் உண்மையான திறமையாளர்களையும் பின்னுக்குத் தள்ளி உள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ளார்.
1800 பேர் போலிகள்:
அதன்படி மத்திய அரசில் செயல்படும் பல்வேறு துறைகளில் கிட்டதட்ட 1,800 பேருக்கும் மேலாக போலியான சான்றிதழ்கள் அளித்து பணிபுரிந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு பணி:
பதவியேற்றுள்ள புதிய அரசானது, மத்திய அரசாங்க ஊழியர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பரிசோதனையினை நடத்தியது. அதன்மூலமாகதான் இப்போலியான ஊழியர்களைப் பற்றிய விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
2010இல் அதிகம்:
இப்போலியான சான்றிதழ் ஊழியர்கள் 2010 ஆம் ஆண்டு முதல்தான் அதிகமாக உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
சாதிச் சான்றும் போலி:
போலியான சான்றிதழ்களை அளி்த்து பணியி்ல் சேர்ந்துள்ளவர்களில் பெரும்பாலானோர் கல்வி சான்றிதழ்கள் மட்டுமல்லாது ஜாதிச்சான்றிதழ்களையும் போலியாக தயாரித்து பணியில் சேர்ந்துள்ளனர்.
ஒழுங்கு நடவடிக்கைகள்:
இதன்படி போலி சான்று அளித்த ஆயிரத்து 832 பேர்களில் 276 பேர் இடை நீக்கம் மற்றும் பணி நீக்கத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 35 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துளார்.
பீகார் ஆசிரியர்கள்:
பீகார் மாநிலத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் சுமார் ஒரு லட்சத்து 43 ஆயிரம் ஆசிரியர்கள் பணியில் சேர்ந்துள்ளனர்.
கண்ணைக் கட்டுதே:
இவர்களில் சுமார் 20 ஆயிரம் பேர் போலியான கல்வித்தகுதி சான்றிதழ்களை அளித்து பணியி்ல் சேர்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 12 ஆயிரம் பேர் போலியானவர்கள் என கண்டறியப்பட்டது.
சிஷாக் நியாஜனிலும் குழப்படி:
மேலும் 2008 ஆம் ஆண்டு சி்ஷாக் நியோஜன் திட்டத்தின் கீழ் பீகார் மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் சுமார் 40 ஆயிரம் பேர் போலி சான்றிதழ் அளி்த்து கல்வி பணியி்ல் சேர்ந்துள்ளனர்.
பணிநீக்க உத்தரவு:
இவர்களில் சுமார் 30 ஆயிரம் பேர் போலியான கல்வி சான்றிதழ் மற்றும் குறைவான மதிப்பெண் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.