தென்பகுதி பாடசாலை ஆசிரியர் ஒருவரை முழங்காலிடுமாறு பணிக்கப்பட்ட
சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து குறித்த ஆசிரியருக்கு நஷ்டஈடாகக் கிடைத்த 3 லட்சம் ரூபா பணத்தை அவர் இலங்கை ஆசிரியர் சங்கத்துக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட ஆசிரியர் சார்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் வழக்குத் தொடர்ந்திருந்தது. விசாரணைகளின் முடிவில் பாதிக்கப்பட்ட ஆசிரியருக்கு 3 லட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இவ்வாறு நஷ்டஈடாகக் கிடைத்த பணத் தொகையை அந்த ஆசிரியர் இலங்கை ஆசிரியர் சங்கத்திடம் வழங்கி அந்த நிதியை மாணவர் நலன்களுக்கு செலவிடுமாறு கோரியுள்ளார். இதேவேளை, மற்றொரு ஆசிரியரும் 40 ஆயிரம் ரூபாவை அன்பளிப்பாக தமது சங்கத்துக்கு வழங்கியுள்ளார் என்று இலங்கை ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.