துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பதவிகளில், 79 பணியிடங்களை
நிரப்புவதற்கான குரூப் - 1 முதல்நிலை தேர்வு, வரும், 20ம் தேதி நடக்கிறது.
இதற்கான, 'ஹால் டிக்கெட்'டை, அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
துணை கலெக்டர் - 3, டி.எஸ்.பி., - 33, வணிக வரித்துறையில், உதவி கமிஷனர் - 33 மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில், உதவி இயக்குனர் - 10 என, 79 காலி பணியிடங்களை நிரப்ப, இத்தேர்வு நடக்கிறது.வரும், 20ம் தேதி காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை தேர்வு நடக்கிறது. 1.65 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, www.tnpsc.gov.in, www.tnpscexams.net ஆகிய இணையதளங்களில், ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது.உரிய முறையில் விண்ணப்பித்தும், ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், உரிய விவரங்களை, contacttnpsc.@gmail.com என்ற இ - மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.அதிக வயது பிரச்னை காரணமாக, 1,045 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.