WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, July 17, 2014

தரம் உயர்த்தப்படும் 200 பள்ளிகள்காலியிடம் நிரப்ப மீண்டும் 'கவுன்சிலிங்' சட்டசபையை எதிர்பார்க்கும் ஆசிரியர்கள்?

சிவகங்கை :தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்படும் அரசு உயர், மேல்நிலைப்பள்ளி காலியிடங்களை நிரப்புவதற்கு மீண்டும் கவுன்சிலிங் அறிவிப்பு, சட்டசபையில் வெளியாகுமா என, ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். தமிழகத்தில் 32 மாவட்டத்திலும் தரம் உயர்வுக்கு தகுதியான அரசு பள்ளிகள் குறித்த பட்டியலை சேகரித்த கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்கியுள்ளது. உயர், மேல்நிலை கல்வியை பொறுத்தவரை இரு பிரிவிலும் தலா 100 பள்ளிகள் என, தரம் உயர்த்தப்படும் வாய்ப்பு இருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு இன்று (ஜூலை17) சட்டசபை கல்வித்துறை குறித்த மானியக் கோரிக்கையின்போது வெளியாகலாம் என, எதிர்பார்ப்பதாக கல்வித்துறை யினர், ஆசிரியர் சங்கத்தினர் நம்பிக்கை தெரிவித்தனர். இதன்படி, உயர்,மேல்நிலை கல்வியில் 200 பள்ளிகளை தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டால், உயர் நிலை வகுப்பில் 500 புதிய இடங்களும், மேல்நிலையில் 900 காலி பணியிடமும் உருவாகும். இவ்விடங்களை நிரப்ப மீண்டும் கவுன்சிலிங் நடத்தினால் உள், வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் கோரிய பலருக்கு வாய்ப்பு கிடைக்கும் என, ஆசிரியர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், " ஏற்கனவே முடிந்த மாறுதல் கவுன்சிலிங்கில் சாதகமான சில இடங்களை மறைத்து, சிபாரிசுகளுக்கு மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. சட்ட சபை கல்வித்துறை மானியக் கோரிக்கையில் தரம் உயர்த்தி அறிவிக்கப்படும் பள்ளிகளுக்குமான காலியிடங்களை நிரப்ப மீண்டும் கவுன்சிலிங் நடத்தினால் அரசியல், பணம் பலமற்று, ஒரே பள்ளியில் பத்தாண்டுக்கு மேல் பணிபுரியும் வெளி மாவட்ட ஆசிரியர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்,” என்றார்.

3 comments:

  1. PG TRB CV mudichavangaluku additional selection vidunga nanga kashimir work koduthalum work panna readya irukom..erakanavae irukarvanga ethir parapa vida engal ethir parpu athigam..last cut off same mark posting kedaikathu athey mark kedaikalana epade..plz cv mudichavangaluku job kedkakanum plz pray for us...

    ReplyDelete
  2. KALVIKUIL ADMIN thanks for publishing educational news..very useful for us, one kindly request any one asking question if no body reply or answer that question ur will reply plz...

    ReplyDelete
  3. Please put posting for all CV completed candidates in PG TRB. At least give posting in additional list like last year. Please give job for all CV candidates. We lost private job.

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.