தொழில்நுட்பக் கல்வி மற்றும் மேலாண்மைக் கல்வி வளர்ச்சிக்காக மேலும் 5
ஐ.ஐ.எம் மற்றும் 5 ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள் நாடு முழுதும் உருவாக்கப்படும் என்றுநிதியமைச்சர்
அருண் ஜெட்லி தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். "ஜம்மு, சத்தீஸ்கர், கோவா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளாவில் ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும். அதேபோல் மேலாண்மைக் கல்வி வளர்ச்சிக்காக, இமாச்சல், பீகார், ஒடிஷா, பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்படும். இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது” என்று அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். உலகத் தரம் வாய்ந்த உயர் கல்வி நாட்டுக்குத் தேவைப்படுவதால், ஜெயபிரகாஷ் நாராயண் திறன் வளர்ப்பு மையம் ஒன்றை மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைக்க இந்த பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.