WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, July 11, 2014

எஸ்.எஸ்.எல்.ஸி., மறுகூட்டல் மதிப்பெண் சான்று வழங்கல்.

நாமக்கல்: எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வெழுதி மதிப்பெண் சான்று பெற்றவரில்,
மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவருக்கு, மறு மதிப்பெண் சான்று வழங்கும் பணி துவங்கி உள்ளது.

தமிழகத்தில், மே, 23ம் தேதி வெளியான எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு முடிவில், மதிப்பெண் குறைந்த மற்றும் மறு கூட்டல் விவரம் தேவைப்பட்ட மாணவர்கள், மாநில தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு விண்ணப்பித்தனர்.
அவர்களின், விடைத்தாள் சரி பார்க்கப்பட்டு, சம்பந்தப்பட்டவருக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் முதல், மறு கூட்டல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண் சான்று வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டது. ஆனால், நேற்று தான், மறு கூட்டல் மதிப்பெண் சான்று, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு வந்ததால், சம்பந்தப்பட்ட மாணவருக்கு புதிய மதிப்பெண் சான்று வழங்கும் பணி துவங்கியது. நாமக்கல் மாவட்டத்தில், எஸ்.எஸ்.எல்.ஸி., மதிப்பெண் விவரங்களை, மறு கூட்டல் கேட்டு, 170 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில், 25 மாணவருக்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மதிப்பெண்ணை காட்டிலும், கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.
அந்த மாணவருக்கான, மறு மதிப்பெண் சான்று, மாவட்ட கல்வி அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
கல்வி அதிகாரிகள் கூறியதாவது:
எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வர், ஏற்கனவே பெற்ற மதிப்பெண் சான்றை, மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு, புதிய மதிப்பெண் சான்றை பெற்றுச் செல்லலாம். மறு கூட்டலில், கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு மட்டுமே சான்று வழங்கப்படும். மற்றவருக்கு, ஏற்கனவே பெற்ற மதிப்பெண் சரியாக இருப்பதால், அதே மதிப்பெண் சான்றை பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே, சம்பந்தப்பட்ட மாணவர், உடனே மறுகூட்டல் மதிப்பெண் சான்றை பெற்று பயனடைய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.