விவசாயிகள் வேளாண் குறித்த புதிய தகவல்களை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு வசதியாக 'கிசான் டிவி' என்ற சேனல் அறிமுகப்படுத்தப்படும் என்று பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
2014-15 ஆண்டுக்கான பொதுப் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.
அப்போது, "விவசாயிகளின் நலனுக்காக, டிடி - கிசான் என்ற பெயரில், விரைவில், தனி டிவி சேனல் துவக்கப்படும்.
வேளாண் மற்றும் அதனை சார்ந்த அனைத்து தகவல்களையும் உடனடியாக விவசாயிகள் அறிந்துக்கொள்ள வசதியாக இது அமையும்.
வானிலை முன்னறிவிப்புகள், புதிய வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்கள், நீர் சேமிப்பு குறித்த யோசனைகள், விவசாய விதைகள் குறித்த தகவல்கள் ஆகியவை தொடர்பான முக்கிய ஆலோசனைகள் இந்த சேனலில் வழங்கப்படும்.
இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்படும். இந்த புதிய சேனல் குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும்" என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.