WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, July 21, 2014

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: செப்.21ல் நடைபெறும்


‘மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு செப்டம்பர் 21ம் தேதி நடத்தப்படும்’ என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
கேந்திரீய வித்யாலயா, நவோதயா வித்யாலயா உள்ளிட்ட சிபிஎஸ்இ பாடத் திட்டப் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர ‘சி-டெட்’ எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்துகிறது. ‘சி-டெட்’ தகுதித் தேர்வு செப்டம்பர் இறுதி வாரத்தில் நாடு முழுவதும் ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது.
இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், பிஎட் பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண் அவசியம். எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வு சலுகை உண்டு. ஆன்லைனில் தகுதியுடைய ஆசிரியர்கள் www.ctet.nic.in என்ற இணையதள முகவரியில் ஆகஸ்ட் 4ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த ஆகஸ்ட் 6ம் தேதி கடைசி நாள். தேர்வு செப்டம்பர் 21ம் தேதி நாடு முழு வதும் நடத்தப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட இடத்தில் ‘சி-டெட்’ தேர்வுக்கு, ஆன்லைனில் இலவசமாக விண்ணப் பிக்க சிபிஎஸ்இ ஏற்பாடு செய்துள்ளது.

1 comment:

  1. Hi tet friends be ready for next central government wars.

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.