WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, July 17, 2014

501 பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஒரு லட்சம் இடங்கள் காலி: அமைச்சர் பழனியப்பன் தகவல்...

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் 501 பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஒரு
லட்சம் இடங்கள் மாணவர்கள் சேராமல் காலியாக இருந்ததாக உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார். சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது, ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியில் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்று அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. முருகன் கோரிக்கை விடுத்தார். இதற்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில்: தமிழகத்தில் 41 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும், 34 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 406 சுய நிதிக் கல்லூரிகளும், தொழில் படிப்புகளை உள்ளடக்கிய 20 டிப்ளமோ கல்லூரிகளும் என மொத்தம் 501 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 10 ஆயிரமாகும். அவற்றில் கடந்த கல்வியாண்டில் ஒரு லட்சம் இடங்கள் காலியாக இருந்தன. எனவே, தேவைக்கேற்ப எந்தெந்த மாவட்டங்களில் பாலிடெக்னிக் கல்லூரிகள் அமைக்க வேண்டுமோ அங்கெல்லாம் கல்லூரிகள் ஏற்படுத்தப்படும் என்றார் பழனியப்பன்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.