சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் மாதிரி நாடாளுமன்ற
பிரதிநிதிகளாக பொறுப்பேற்ற மாணவிகளுடன் (இடமிருந்து) மாதிரி நாடாளுமன்ற அமைப்புத் தலைவர் மகா சுவேதா முரளி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா, பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி. கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன், டீன் அர்ச்சனா பிரசாத். கல்வியால் தான் சமூக மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி பேசினார். சென்னை எம்.ஓ.பி.வைஸ்ணவா பெண்கள் கல்லூரியில் மாதிரி நாடாளுமன்ற பிரதிநிதிகள் கொண்ட அமைப்பை (நற்ன்க்ங்ய்ற் இஹக்ஷண்ய்ங்ற்) செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: பொது வாழ்வில் தலைமைப் பதவி முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தப் பெரிய சமூகத்தில் ஒருவரின் செயல் மற்றொருவரைப் பாதிப்புக்குள்ளாக்கும். தலைமைப் பதவியில் சூழ்நிலை பிரதான இடத்தைப் பெற்றுள்ளது. அதிலிருந்து பல்வேறு விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் திறன் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு அவசியம். "கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளில் மனிதர்களுக்கு இடையே நடைபெற்ற போர்களில் சுமார் 140 கோடி பேர் கொல்லப்பட்டனர். இந்த மனித இன அழிப்பில் இந்தியாவின் பங்கு குறைவு' என்பதை ஹவாய் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் கலிங்கப் போரின் போதுதான் சுமார் 1 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். மனிதன் தர்ம நெறியைக் கடைபிடித்து வந்தபோது சட்டத்துக்கான அவசியம் ஏற்படவில்லை. மனிதன் இன்பத்துக்கு ஈர்க்கப்பட்ட பின்னர் அவை தோன்றின. மேற்கத்திய நாடுகள் பகவத் கீதையில் பரிந்துரைக்கப்படும் தலைமை முறையை ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால் அதற்கு நேர்மாறானதை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். இலவசங்கள் கொடுப்பது சிறந்த தலைமைக்கு அழகல்ல. இலவசங்கள் மக்களை ஊழல்வாதிகளாக மாற்றும். நாளடைவில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளை மக்கள் ஏற்கத் தொடங்கி விடுவர். சிறந்த தலைமை என்ற போர்வையில் செயல்படுபவர்களை வெளியேற்ற ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும். அந்த மாற்றத்தைக் கொண்டு வர கல்வி அவசியம் என்றார் அவர். நிகழ்ச்சியில், மாதிரி நாடாளுமன்றம் போன்று தொடங்கப்பட்ட மாணவர்கள் அமைப்பின் பிரதமர், உறுப்பினர்களை "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் தலைவர் மனோஜ்குமார் சொந்தாலியா பாராட்டினார். எம்.ஓ.பி.வைஸ்ணவா பெண்கள் கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.