WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, July 9, 2014

அரசுப் பள்ளி வேலை நாள் பட்டியல் வெளியீடு மொத்த கற்றல் கற்பித்தல் நாள் 186 ஆக உயர்வு!

கடந்த கல்வி ஆண்டை காட்டிலும், நடப்பு கல்வி ஆண்டில், மொத்த வேலை
நாட்களை அடிப்படையாக கொண்டு, மொத்த கற்றல், கற்பித்தல் நாள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு, 183 இருந்து, 186 நாட்களாக நிர்ணயம் செய்து, பள்ளி நாட்காட்டியை அரசு வெளியிட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை சார்பில், 2014-15ம் கல்வி ஆண்டுக்கான துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான, பள்ளி நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மொத்த வேலை நாள் 220, அதில், மொத்த கற்றல் கற்பித்தல் நாள் 205, தேர்வு நாள் 15, உள்ளூர் விடுமுறை, மூன்று நாள் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், மொத்த வேலை நாள், 210, அதில், மொத்த கற்றல், கற்பித்தல் நாள் 186, தேர்வு நாள் 24, உள்ளூர் விடுமுறை, மூன்று நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த கல்வி ஆண்டில், மொத்த கற்றல் கற்பித்தல் நாள் 183, என இருந்தது. ஆனால், நடப்பு கல்வி ஆண்டில்,மொத்த கற்றல் கற்பித்தல் நாள் 186 நாளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அவை, மொத்த வேலை நாள் மற்றும் விடுமுறை நாட்களை அடிப்படையாக வைத்து, கற்றல் கற்பித்தல் நாளாக, மூன்று நாள் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில், சனிக்கிழமையில், தெலுங்கு வருட பிறப்பு, உழவர் திருநாள், மிலாடி நபி, ஞாயிற்றுக் கிழமையில், பக்ரீத், கிருஷ்ண ஜெயந்தி ஆகிய, ஐந்து விடுமுறை நாள் வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.