WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, July 26, 2014

டி.என்.பி.எஸ்.சி., பதவிகளை நிரப்புவதில் இழுபறி : காத்திருப்பவர்கள் ஏமாற்றம்.?

அரசுப் பணியாளர் தேர்வாணைய மான, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் மற்றும் எட்டு
உறுப்பினர் பதவி களை நிரப்புவதில், தொடர் இழுபறி ஏற்பட்டுள்ளது.
காலி பணிஇடங்களை நிரப்ப, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பதவிகளை எதிர்பார்த்து காத்து இருப்பவர்கள், ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

போட்டி தேர்வுகள் :
தமிழக அரசு துறைகளுக்கு, தேவையான அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை தேர்வு செய்வதில், டி.என்.பி.எஸ்.சி., முதலிடம் வகிக்கிறது. ஆண்டு முழுவதும், பல்வேறு போட்டி தேர்வுகளை நடத்தி, தகுதியானவர்களை தேர்வு செய்கிறது.

இந்த அமைப்பின் தலைவராக இருந்த நவநீத கிருஷ்ணன், சமீபத்தில், அ.தி.மு.க., சார்பில், ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினரான பாலசுப்ரமணியன், தலைவர் பதவியை, கூடுதலாக கவனித்து வருகிறார். நவநீதகிருஷ்ணன், ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்ட, அடுத்த ஓரிரு நாட்களில், புதிய தலைவர் நியமன அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இதுவரை, புதிய தலைவர் நியமிக்கவில்லை. உறுப்பினர் பதவிகளும், அதிக அளவில் காலியாக உள்ளன. ஷோபினி, ஜேசுராஜா, ராஜா உட்பட, ஏழு பேரின் பதவிகாலம் முடிந்ததால், இந்த பதவிகள் காலியாக உள்ளன. தற்போதைய
நிலையில், கூடுதல் பொறுப்பாக தலைவர் பணிகளைச் செய்யும் பாலசுப்ரமணியன், பன்னீர் செல்வம், ரத்னசபாபதி, பெருமாள்சாமி, குப்புசாமி, செல்வமணி ஆகிய, ஆறு பேர் மட்டுமே, உறுப்பினர்களாக உள்ளனர். எந்த பதவிகளும் நிரப்பப்படாததால், தேர்வாணைய பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக, துறை வட்டாரம் தெரிவிக்கிறது. 192 சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்ப, அரசு அனுமதி வழங்கி, ஐந்து மாதங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால், இதுவரை, போட்டி தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகவில்லை.
தேக்கம் :
டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், உதவியாளர் பணிஇடங்கள், அதிகளவில் காலியாக இருப்பதாகவும், துறை வட்டாரம் தெரிவிக்கிறது. இதன் காரணமாகவும், ஏராளமான கோப்புகள் தேங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள், அரசின் தாமதத் தால், ஏமாற்றம் அடைந்துள்ளனர். 62 வயது அல்லது பதவி ஏற்றதில் இருந்து, ஆறு ஆண்டுகள் முடியும் வரை மட்டுமே, பதவியில் நீடிக்க முடியும் என்பதால், பதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள், தவியாய் தவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.