கல்விதுறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில், விரைவில் புதிய முதன்ைம கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்) பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்), அவர்களுக்கு இணையான நிலையில் உள்ள கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், கடந்த மே 31, மற்றும் ஜூன் 30 ல் பணி ஓய்வு பெற்றனர். தற்போது 12 க்கும் மேற்பட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது.இந்த பணியிடங்களை நிரப்ப, பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு பட்டியல், பணியிட மாற்றம் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் சி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் பட்டியல் வெளியிடப்படும், என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.