WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, July 30, 2014

கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் மதிப்பெண் கணக்கிடும் முறை எதிர்த்த மனு தள்ளுபடி

கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் மதிப்பெண் கணக்கிடும்  முறையை எதிர்த்த மனு ஐகோர்ட்டில் தள்ளுபடியானது.


மதுரையை  சேர்ந்த மகாராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  



தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆசிரியர்  பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு  வாரியம் 2008ல் அறிவிப்பு வெளியிட்டது. இந்த தேர்வில் ஆசிரியர்  அனுபவத்திற்கு 15 மதிப்பெண், பி.எச்டி., எம்.பில். படிப்புக்கு 9  மதிப்பெண், ஆராய்ச்சி படிப்புக்கு 5 மதிப்பெண், நேர்முகத் தேர்வுக்கு 10  மதிப்பெண் என்று மொத்தம் 39 மதிப்பெண் பெற்றவர்கள் தேர்வு  செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த  மதிப்பெண் கணக்கிடும் முறை சட்ட விரோதமானது. எனவே, இந்த  முறையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில்  கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி எஸ்.நாகமுத்து விசாரித்தார். ‘2008ம் ஆண்டு  வெளியிடப்பட்ட அறிவிப்பு அடிப்படையில் கல்லூரி ஆசிரியர்  நியமனங்கள் முடிந்து விட்டன. தற்போது, நியமன முறைகளை ரத்து  செய்தால் பணி நியமனம் பெற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். தற்போது  உள்ள சூழ்நிலையில் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களை  விசாரிக்காமல் எந்த முடிவும் எடுக்க முடியாது’ என்று கூறி மனுவை  தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.www.kalvikkuyil.blogspot.com

3 comments:

  1. could you any one tell me when pg trb selection list publish

    ReplyDelete
  2. hi esk i am very happy with your profitless effect to publish edu news

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.