கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் மதிப்பெண் கணக்கிடும் முறையை எதிர்த்த மனு ஐகோர்ட்டில் தள்ளுபடியானது.
மதுரையை சேர்ந்த மகாராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 2008ல் அறிவிப்பு வெளியிட்டது. இந்த தேர்வில் ஆசிரியர் அனுபவத்திற்கு 15 மதிப்பெண், பி.எச்டி., எம்.பில். படிப்புக்கு 9 மதிப்பெண், ஆராய்ச்சி படிப்புக்கு 5 மதிப்பெண், நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண் என்று மொத்தம் 39 மதிப்பெண் பெற்றவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மதிப்பெண் கணக்கிடும் முறை சட்ட விரோதமானது. எனவே, இந்த முறையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி எஸ்.நாகமுத்து விசாரித்தார். ‘2008ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பு அடிப்படையில் கல்லூரி ஆசிரியர் நியமனங்கள் முடிந்து விட்டன. தற்போது, நியமன முறைகளை ரத்து செய்தால் பணி நியமனம் பெற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். தற்போது உள்ள சூழ்நிலையில் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களை விசாரிக்காமல் எந்த முடிவும் எடுக்க முடியாது’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.www.kalvikkuyil.blogspot.com
hi friends
ReplyDeletecould you any one tell me when pg trb selection list publish
ReplyDeletehi esk i am very happy with your profitless effect to publish edu news
ReplyDelete