WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, July 22, 2014

FLASH NEWS: ஆசிரியர் நியமனம்: தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 1,400 இடம் ஒதுக்கீடு..!!

பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 1,400
இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
'பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்' என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த வகையில், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்கள் நீங்கலாக மற்ற பாடப் பிரிவுகளை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஏறத்தாழ 1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பட்டதாரி ஆசிரியர் பணிக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியான இளங்கலை பட்டப் படிப்பையும், பிஎட் படிப்பையும் தமிழ் வழியில் படித்தவர்கள் மேற்கண்ட காலி இடங்களுக்கு தகுதிபெறுவார்கள்.
அவர்கள் 10ம் வகுப்பு, பிளஸ் 2 கல்வித் தகுதியை தமிழ்வழி அல்லது ஆங்கில வழி எந்த வழியில் படித்திருந்தாலும் பரவாயில்லை. பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை தமிழ் வழியில் படித்திருக் கிறார்களா என்பது மட்டும் இந்த 20 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களுக்கு பார்க்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட இதர துறைகளில், பட்ட தாரி ஆசிரியர் பணிக்கு காலி இடங் கள் வரவேண்டியுள்ளது.
அந்த துறைகளில் காலி இடங்கள் வரும் பட்சத்தில் தமிழ்வழி ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
No 1 speed in all types of education and employment news so keep touch with kalvikkuyil for every hours(new) news.

15 comments:

  1. when ll pg final list publish......

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. ella pg selected candidatesum serndhu porratam seivom appodhan nammudaiya problem trb ku therium . otherwise they will not bother about us

    ReplyDelete
  4. Chemistry subject ku tamizh vazhiyil padithavarauku ethana posting?

    ReplyDelete
  5. நிச்சயம் தமிழ் வழி வேதியியல் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு.

    ReplyDelete
  6. Epselva what about pg? Please tell me sir? All r talking about tet,I think trb forgot us.

    ReplyDelete
    Replies
    1. No sir. We are all here so dnot worried all are finesh very Soooooooon

      Delete
  7. All are expected this week sir but what we do?

    ReplyDelete
  8. Chemistry wt ethuvarai thevai sir

    ReplyDelete
  9. EXPECTATION:

    " For 2011, 2012, 2013 academic yrs- in govt schools 71,708 tchr posts r given permission to appoint. In that upto now 53,288 tcrs get appointed. So remaining (18,420) teachers get appointment soon in the hands of our CM" --- EDN MINISTER VEERAMANI ANNOUNCEMENT IN JULY 17TH ASSEMBLY. (NEWS FROM TAMIL HINDU DATED 18.07.2014 page 6.)

    So total appointment to b held soon wil b 18420 as edn minister already announced as 18,000 posts to b filled as published in newspaper.

    TRB GIVEN NOTIFICATION FOR

    10726 POSTS - PAPER 2

    SO IN REMAINING 7694 POSTS -
    it may b
    2200 PG POSTS (600 pg tam filled. Total 2881)
    300 unfilled PG TAMIL MEDIUM OF TRB 2012
    2000(aprox) SGT PAPER 1 POSTS.

    10726 + 2881+300+2000 = 15900.

    18400-15900=2500 ???

    This 2500 is expected to raise in vacancy.

    ADDITIONALLY remaining 2500 POSTS-(approximately) announcement for
    PAPER 2 & SPL TET as 2013-2014 vacancy WOULD BE QUICKLY EXPECTED SOON from our CM under 110]

    ReplyDelete
    Replies
    1. SUPPORTIVE OLD NEWS FROM TAMIL HINDU DATED 18.07.2014 PAGE 6:

      புதிய ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை- முதல்வர் வழங்குகிறார்!

      சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான
      விவாதத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி, தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப் படவில்லை என்று குறிப்பிட்டார்.
      அதற்குப் பதில் அளித்துப் பேசிய பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி, “கடந்த 3 ஆண்டுகளில் 760 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 300 பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன, அரசு பள்ளிகளில் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளால் மாணவர்கள் எண்ணிக்கை கூடுதலாக ஒரு லட்சம் அதிகரித்து இருக்கிறது” என்றார்.
      அவர் மேலும் கூறுகையில்,

      “2011, 2012, 2013-ம் ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் 71,708 ஆசிரியர் களை நியமிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
      அதில் 53,288 ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுவிட்டனர்.

      எஞ்சிய புதிய ஆசிரியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா விரைவில் பணிநியமன ஆணை வழங்குவார்” என்று தெரிவித்தார்.

      Delete
  10. ella postingum ungalukku than paper2 why feeling ? paper 1 ellam pichai edukkalam

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.