பழநி :
பழநி அருகே ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 90 பேருக்கு
ஆசிரியர் பணி கிடைத்துள்ளது. கடந்த 2013 ஆகஸ்ட் 18,19 ல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு நடந்தது.
இத்தேர்விற்காக, ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்றனர்.
இதில் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் தேர்ச்சி பட்டியல் ஆக., 10 ல் வெளியானது.
அதில், ஆயக் குடியைச் சேர்ந்த 15 பேர் ஆசிரியர் பணிக்கு தேர்வாகியுள்ளனர். கொடைக்கானல், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 90 பேருக்கு ஆசிரியர் பணி கிடைத்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.