சென்னை : 'இளநிலை உதவியாளர், நில அளவர், தட்டச்சர் உள்ளிட்ட
பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, இம்மாதம், 18 முதல் 23ம் தேதி வரை நடக்கும்' என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இதுகுறித்த, டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு:
தொகுதி நான்கில் அடங்கிய, இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - 3, பதவிகளுக்கான தேர்வு, கடந்த ஆண்டு ஆக., 25ல் நடந்தது. இவர்களுக்கான காலிப் பணியிடங்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு, இம்மாதம், 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை, சென்னை, வ.உ.சி., நகரில் உள்ள, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கிறது. இதுகுறித்த விவரம், தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள், தங்கள் சான்றிதழ்கள் மற்றும் கையொப்பமிட்ட சான்றிதழ் நகல்களை, கலந்தாய்வுக்கு வரும் போது, தவறாமல் கொண்டு வர வேண்டும். மேலும், கணினி வழி விண்ணப்பத்தில், 10ம் வகுப்பு, படிப்பை தமிழ் வழியில் பயின்றதற்கான உரிமம் கோரியுள்ள விண்ணப்பதாரர்கள், அவர்கள் பயின்ற பள்ளியின் முதல்வர் அல் லது தலைமை ஆசிரியரிடம் இருந்து, சான்றிதழ் பெற்று வர வேண்டும். விண்ணப்பதாரர்கள், சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்வுக்கு பரிசீலிக்கப்படும் போது உள்ள காலிப்பணியிடங்களை பொறுத்தே அனுமதிக்கப்படுவர். கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் அனைவருக்கும், பணி நியமனம் வழங்கப்படும் என, உறுதி கூற இயலாது. கலந்தாய்வுக்கு வரத் தவறினால், அவர்களுக்கு மறு வாய்ப்பும் அளிக்கப்பட மாட்டாது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.