மதுரை :
'மாணவர் தேர்ச்சி வீதம் குறைவுக்கு, ஆசிரியர்களை மட்டுமே குறை சொல்ல
முடியாது' என, மதுரை ஐகோர்ட் கிளை தீர்ப்பளித்துள்ளது. நெல்லை மாவட்டம், கொங்கணத்தான்பாறை இந்திய சாலை போக்குவரத்து பயிற்சி மைய (ஐ.ஆர்.டி.சி.,) பாலிடெக்னிக் உள்ளது. இங்கு ஆசிரியராக பணியாற்றும் ஷாகின், மாணிக்கவாசகம் உட்பட, ஏழு பேர், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: நாங்கள் கடமையை, நேர்மையாக செய்யவில்லை எனக் கூறி, 'மெமோ' கொடுத்தனர். மாணவர்களின் தேர்ச்சி வீதம் குறைந்ததாகவும், அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கூறியும் இந்த மெமோ வழங்கப்பட்டது. பாடத்திட்டம் கடுமையாக இருந்தது. அதனால் சரியாக படிக்காத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. அதில் இந்த மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை. எனவே குறைந்த மதிப்பெண் பெற்றனர். எங்களுக்கு மெமோ வழங்கிய நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்து நீதிபதி ஆர்.மகாதேவன் பிறப்பித்த உத்தரவு: ஆசிரியர்கள் பல்வேறு பாடங்களை நடத்தியுள்ளனர். அப்படி இருக்கும்போது இவர்கள் தான் தேர்ச்சி வீதம் குறைவுக்கு காரணம் என, கூறமுடியாது. ஆசிரியர் மீதான குற்றச்சாட்டு பொத்தாம் பொதுவாக உள்ளது. பாடத்திட்டம் கடினமானது என, ஆசிரியர்கள் கூறினர். தேர்ச்சி வீதம் குறைந்ததற்கான காரணத்தை ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களை கலந்தாலோசிக்காமல், மெமோ கொடுத்ததை எப்படி ஏற்க முடியும்? மனுதாரர்கள் எந்த தவறும் செய்யவில்லை. நிர்வாகம் தான் இதற்கு பொறுப்பு. கற்பித்தல் என்பது சாதாரண பணி அல்ல. தேர்ச்சிவீதம் குறைவுக்கு ஆசிரியர்களை குறைசொல்வது அவர்களை சோர்வடையச் செய்யும். எனவே ஆசிரியர்களை பொறுப்பாக்க முடியாது. மெமோ நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
கல்வி, யோகா, முதலுதவி, மருத்துவம், தியானம்,TNPSC, செல்போன், கணிப்பொறி above d All details @ http://dictionary4life.blogspot.in
ReplyDelete