திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 20-ம்
தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
இக் கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்புகளுக்கான கலந்தாய்வு ஏற்கெனவே நடைபெற்று முடிந்துள்ளது.
இருப்பினும் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கும், முதுகலை பாடப்பிரிவுகளுக்கும் இம் மாதம் 20-ம் தேதி முதல் கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதன்படி, வரும் புதன்கிழமை (ஆகஸ்ட் 20) முதுகலையில் அனைத்து பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வும், 22-ம் தேதி எம்.பில்., அனைத்து பாடப் பிரிவுகளுக்கான நுழைவுத் தேர்வும், 25-ம் தேதி எம்.பில்., அனைத்து பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கையும் நடைபெறுகிறது. இதேபோல, 26-ம் தேதி இளங்கலை அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வும், 27-ம் தேதி இளங்கலை கலைப் பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது. விண்ணப்பித்துள்ல மாணவ-மாணவியர் உரிய நேரத்தில் கலந்தாய்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று கல்லூரி முதல்வர் எம்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.