அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ், கடந்த 2011-ம் ஆண்டு
பள்ளிகளில், ஓவியம், தையல், உடற்பயிற்சி பிரிவுகளுக்கு, பகுதி நேர அடிப்படையில் ஆசிரியர்கள், மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளத்தில் நியமிக்கப்பட்டனர்.
இவர்களுக்கான சம்பளம், எஸ்.எஸ்.ஏ., மூலம், தலைமை ஆசிரியர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு, கிராம கல்விக்குழு மூலம் வழங்கப்பட்டு வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.2 ஆயிரம் சம்பள உயர்வு அறிவிப்பு, தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இந்நிலையில், தற்போது அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் விபரங்களையும், பகுதி நேர ஆசிரியர்கள் தேவைப்படும் பட்சத்தில் காலியிடம் இருப்பின் அது குறித்த விபரங்களையும், அனுப்பி வைக்க தொடக்க கல்வி இயக்குனரகம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் இது தொடர்பான விபரங்களை சேகரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.