''உயர் கல்வியில், மாணவர் சேர்க்கையை, அதிகரிக்க, இளங்கலை முதல் பிஎச்.டி., வரை, 163 புதிய பாடப் பிரிவுகள் துவங்கப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டசபையில், நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
* கோவை, திருச்சி கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குனர் அலுவலகங்கள் பிரிக்கப்பட்டு, தஞ்சையிலும், தர்மபுரியிலும் புதிதாக கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகங்கள் துவங்கப்படும்.
*விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், வேலூர் கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகங்கள் கட்டுப்பாட்டில் சேர்க்கப்படும்.
*தனியார் கட்டடங்களில் இயங்கும், திருச்சி, மதுரை, நெல்லை மாவட்டங்களில் உள்ள, கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகங்களுக்கு, 24,300 சதுரடியில், 4.59 கோடி ரூபாய் செலவில், புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
*உயர்கல்வியில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, 2014 - 15ல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 26 இளங்கலை; 23 முதுகலை; 62 எம்.பில்., - 52 பிஎச்.டி., என, 163 புதிய பாடப் பிரிவுகள் துவங்கப்படும். இவ்வாறு, அவர் அறிவித்தார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.