விழுப்புரம் அரசு கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு முடிவில் குளறுபடிகள் நடந்துள்ளதால், மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் அரசு அண்ணா கலைக் கல்லுாரியில் கடந்தாண்டு (2013--14) மூன்றாம் ஆண்டு பி.ஏ., பி.எஸ்சி., மற்றும் பி.காம்., படித்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். நேற்று முன் தினம், வேலுார் திருவள்ளுவர் பல்கலைக் கழகம் மூலம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதில், தேர்வு எழுதிய சிலருக்கு மதிப்பெண்கள் வரவில்லை. தேர்வு எழுதாத சில மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப் பட்டுள்ளது. இதேபோல், பி.காம்., மூன்றாம் ஆண்டு தேர்வு எழுதிய 107 மாணவர்களுக்கு ( எஸ்.சி.எம்.63) என்ற தேர்வில் சரியான முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை.
பி.ஏ., ஆங்கிலப் பிரிவில் தேர்வு எழுதிய 40 மாணவர்களுக்கு (யு.இ.என்.63., யு.இ.என்.67.,) ஆகிய இரு பாடங்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. வரலாறு பிரிவு மாணவர்களுக்கு ஜப்பானிய வரலாறு பாடத்தில் மதிப்பெண்கள் வெளியிடவில்லை. பி.எஸ்சி., தாவரவியல் பிரிவில் (எஸ்.டி.எல்.63., எஸ்.டி.எல்.68) ஆகிய இரு பாடங்களில் 10 பேருக்கும், பி.எஸ்சி., கணிதப் பிரிவில் ( எஸ்.எம்.ஏ.63.,) 150 பேருக்கும், பி.ஏ., தமிழ் (எஸ்.டி.ஏ.63., எஸ்.டி.ஏ.67) பாடத்தில் 40 பேருக்கும், பி.எஸ்சி., இயற்பியல் பிரிவில் (இ.எஸ்.பி.எச்.64ஏ) பாடத்தில் 40 மாணவர்களுக்கும் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டதில் குளறுபடி நடந்துள்ளது. இதனால் சரியான தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ள முடியாமல் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அதிருப்தியடைந்த மாணவர்கள் பலர், நேற்று காலை கல்லுாரிக்கு வந்து பேராசிரியர்களை சந்தித்து விளக்கம் கோரினர். பேராசிரியர்கள், உரிய பதில் தர முடியாமல் சிரமப்பட்டனர். இப்பிரச்னையால் மூன்றாம் ஆண்டு முடித்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், முதுகலை உள்ளிட்ட மேற்படிப்பிற்கு, விண்ணப்பிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.