அரசு கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது, யு.ஜி.சி., வழிகாட்டுதல் படி 65 ஆக உயர்த்த வேண்டும்,
கவுரவ விரிவுரையாளருக்கு மாதச் சம்பளமாக ரூ.21 ஆயிரத்து 600 வழங்க வேண்டும், கல்லூரி ஆசிரியர் களுக்குரிய இடமாறுதல் கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம் சார்பில், நாளை (ஆக., 2ல்) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இது குறித்து மாநில இணை செயலாளர் குமார் கூறுகையில்,
''கல்லூரி கல்வி இயக்குனர் தேவதாஸ், கல்லூரி ஆசிரியர் மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை யில் கோரிக்கைகள் அரசுக்கு எடுத்து சென்று, அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதியளிக்கப்பட்டது. மேலும், இயக்குனர் இம்மாதம் 1,093 ஆசிரியர்களுக்குரிய நேர்முகத்தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும், ஆகஸ்ட் இறுதியிலேயோ, செப்டம்பர் முதல் வாரத்திலோ, இடமாறுதல் பொது கலந்தாய்வு நடத்தப்படும். காலியாகவுள்ள 530 உதவி பேராசிரியர்களின், பணியிடத்திற்கான அறிவிப்பு விரைவில் வரும் என கூறியுள்ளார், என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.