தாசில்தார் அலுவலகத்தில் தொடங்கி, மக்கள் தங்களுடைய தேவைக்காக அன்றாடம் சந்திக்க வேண்டிய எல்லா அத்தியாவசிய அரசு அலுவலகங்களிலும் இந்த நிலைமை உள்ளது.
அரசு ஊழியர்களின் அதிகார மமதைக்கு அடிப்படையாக இருப்பது, தேவையற்ற சில சட்ட திட்டங்கள்தான். இவற்றில் எளிமையும், வெளிப்படையையும் கொண்டு வந்து விட்டால், அதிகாரிகள் ஆட்சி என்பது போய், உண்மையிலேயே மக்களாட்சி என்பது உண்மையாகும்.
அரசு ஊழியர்களின் அதிகார மமதைக்கு அடிப்படையாக இருப்பது, தேவையற்ற சில சட்ட திட்டங்கள்தான். இவற்றில் எளிமையும், வெளிப்படையையும் கொண்டு வந்து விட்டால், அதிகாரிகள் ஆட்சி என்பது போய், உண்மையிலேயே மக்களாட்சி என்பது உண்மையாகும்.
இந்த நிலையை உருவாக்க வேண்டும் என்றால், அந்த மக்களின் உணர்வையும், சிரமத்தையும் உணர்ந்த தலைவர்களால் மட்டுமே முடியும். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் பிரதமர் மோடி. சாதாரண குடும்பத்தில் பிறந்து, டீ விற்று வளர்ந்தவர் என்பதால் அடித்தட்டு மக்களின் அடிப்படை பிரச்னைகளை நன்றாக அறிந்தவராகவே இருக்கிறார்.
பள்ளி சேர்க்கை முதல் வங்கியில் கடன் வாங்குவது வரை எல்லா விண்ணப்பங்களிலும், சான்றிதழ்களிலும் அது உண்மையானது என நிரூபிக்க, கெசட்டட் என அழைக்கப்படும் பச்சை இங்க் அதிகாரிகளின் கையெழுத்து அவசியமாகிறது. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்கும் உந்து விசையாக அமையக் கூடிய இந்த கையெழுத்துக்கும், கையூட்டு வாங்குபவர்கள்தான் அதிகம். ஏதோ ஒரு சிலர்தான், மனிதாபிமான அடிப்படையில் இந்த சேவையை செய்கின்றனர். இது அதிகாரிகளின் கடமை என்றாலும், கையூட்டு வாங்காமல் கையெழுத்து போடுவதால் அது சேவை என்ற அடைமொழிக்கு உரித்தாகிறது.
இனிமேல், இந்த பச்சை மை கையெழுத்துக்காக அதிகாரிகளிடம் மன்றாட வேண்டிய, கூத்தாட வேண்டிய அவசியம் மக்களுக்கு இருக்கப் போவது இல்லை. இந்த விவகாரத்தில் இனிமேல், மக்களே ராஜா. அவர்களுக்கு அவர்களே நற்சான்று கொடுத்து கொள்ளலாம். அதற்கான வரலாற்று சிறப்புமிக்க ஒரு உத்தரவை பிறப்பித்து இருக்கிறார் பிரதமர் மோடி. மத்திய, மாநில அரசுகளுக்கு இந்த உத்தரவு பறந்திருக்கிறது. எந்தவொரு விண்ணப்பத்துக்கும், சான்றிதழுக்கும் அதன் உண்மை தன்மையை உறுதிப்படுத்த, மக்களே இனிமேல் ஒப்புதல் அளித்தால் போதுமானது. யாருடைய சான்றும் தேவையில்லை.
ஆனால், சலுகை கிடைக்கும்போது அதில் ஏற்படும் சலனத்தால் தவறு செய்ய நினைக்கும் மக்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் கடிவாளம் போடப்பட்டு இருக்கிறது. சரிபார்ப்பின் போது உண்மை சான்றுகளை அவர்கள் காண்பிக்க வேண்டும். அதில் தவறு இருப்பது தெரிந்தால், தண்டனைக்கும் வழி செய்துள்ளார் மோடி. கட்டுப்பாடுடன் கூடிய சுதந்திரம்; வரவேற்க வேண்டிய ஒன்று.
இதுபோல் மக்களுக்கு இன்னல் அளிக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் தலைவர்களும், அதி காரிகளும் கவனம் செலுத்தினால் மக்களுக்கும் நன்மை, அரசுக்கும் நற்பெயர் கிடைக்கும். எல்லாவற்றிலும் ஒருவரே கவனம் செலுத்த முடியாது. அதிகாரிகளும், மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.www.kalvikkuyil.blogspot.com
ithu oru nalla muyarchi
ReplyDeletePlease Indian citizens don't misuse this opportunity
ReplyDelete