தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
(ஏற்கனவே அத்துறை பள்ளிகளில் பணிபுரிபவர்களுக்கு மட்டும்)ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர், கணினி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 2014-2015-ம் கல்வி ஆண்டுக்கான பொதுமாறுதல் (கலந்தாய்வு) அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஆன்-லைனில் நாளை (புதன்கிழமை) காலை 11.00 மணி முதல் நடைபெறும். இந்த பதவிகளுக்கு ஆன்-லைனில் மாறுதல் கோரி பதிவு செய்து விண்ணப்பித்தவர்கள் மட்டும் ஆன்-லைன் கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.