கமுதி ஒன்றியம் வெள்ளாங்குளம் அரசு தொடக்கப்பள்ளியில் 3 மாணவர்களுக்கு, 2 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.
வெள்ளாங்குளத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். ஆனால், 5 ம் வகுப்பில் ஒரு மாணவனும் ஒரு மாணவி என இருவரும், 4 ம் வகுப்பில் ஒரு மாணவி என மொத்தம் 3 பேர்களே படிக்கின்றனர். அடுத்த ஆண்டு 5ம் வகுப்பு மாணவர்கள் உயர்நிலைப்பள்ளிக்கு சென்றுவிட்டால், இப்பள்ளியில் ஒரே ஒரு மாணவி மட்டும் இருப்பார் என, ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.பஸ் போக்குவரத்தும் இல்லாத இந்த கிராமத்தில் பணிபுரிவது கடினம் என ஆசிரியர்கள் விரக்தியில் உள்ளனர். இது குறித்து மாவட்டநிர்வாகம் நடவடிக்கை எடுத்து, இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளி தொடர்ந்து செயல்படவும், அதிக மாணவ, மாணவிகளை சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.