WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, August 26, 2014

10, பிளஸ்2 வகுப்பில் 100 சதவீத தேர்ச்சிக்கு புதிய ஏற்பாடு

எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ்2 மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி
அடைவதற்காக அனைத்துப் பாட ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

அரசு பொதுத்தேர்வுகளில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்களை 100 சதவீதம் தேர்ச்சியடைய வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் கடந்த சில ஆண்டுகளாக கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சிறப்பு வகுப்புகள், மெல்ல கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கவனிப்பு போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பலனாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்கள் தேர்ச்சி எண்ணிக்கை ஏறுமுகமாக உள்ளது. ஆயினும், 100 சத வீத தேர்ச்சி என்ற இலக்கை எட்ட முடியவில்லை.

அனைத்து பாட ஆசிரியர்களுக்கும் பயிற்சி

அரசு பொதுத்தேர்வுகளில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்களை 100 சதவீதம் தேர்ச்சியடைய வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் கடந்த சில ஆண்டுகளாக கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சிறப்பு வகுப்புகள், மெல்ல கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கவனிப்பு போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பலனாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்கள் தேர்ச்சி எண்ணிக்கை ஏறுமுகமாக உள்ளது. ஆயினும், 100 சத வீத தேர்ச்சி என்ற இலக்கை எட்ட முடியவில்லை.

இந்த நிலையில், நடப்பு (2014& 2015) கல்வி ஆண்டிலும் 100 சதவீத தேர்ச்சி என்ற குறிக்கோளை நிறைவேற்ற புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. குறிப்பாக, ஏற்கனவே 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் குறிப்பிட்ட பாட ஆசிரியர்களுக்கு, அவரவர் பாடங்களில் சிறப்பான பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாணவர்களின் கற்கும் திறன் மேம்பட்டு, பொதுத்தேர்வை எந்த பயமுமின்றி எதிர்கொண்டு, அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைய மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்பு பணியிடை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த பணியிடை பயிற்சி மாநில அளவில் நடத்தப்படும். இதற்கு முதன்மை கருத்தாளர்களாக ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10ம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி வழங்கிய பாடவாரியான ஆசிரியர்கள் 2 பேர் தேர்வு செய்யப்படுவர்.

இதுபோல் பிளஸ்2 வகுப்பில் அனைத்து பாடங்கள் வாரியாக 100 சதவீத தேர்ச்சி இலக்கை எட்ட வைத்த ஆசிரியர்கள் பாடவாரியாக தலா இருவர் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு முதன்மைக் கருத்தாளர் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெறும் இந்த முதன்மைக் கருத்தாளர்கள் ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பர்.

இதற்காக, ஒவ்வொரு கல்வி மாவட்டத்தில் முதன்மை கருத்தாளர்கள் இனம் கண்டறியப்பட்டு அவர்களது பட்டியல் தயாரிக்கப்பட்டு, கல்வித்துறைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்பார்வையில் நடந்து வருகிறது.


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.