WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, August 4, 2014

அபுதாபியில் பணிபுரிய ஐ.டி.ஐ. படித்தவர்கள் தேவை: தமிழக அரசு நிறுவனம் அறிவிப்பு.

அபுதாபியில் உள்ள முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய ஐ.டி.ஐ. படிப்புடன் பணி அனுபவம்
பெற்றவர்கள் அதிக எண்ணிக்கையில் தேவைப்படுவதாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:
அபுதாபியில் உள்ள ஓர் முன்னணி நிறுவனத்திற்கு ஐ.டி.ஐ. தேர்ச்சியுடன் 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற சட்டரிங் கார்பெண்டர்கள், ஸ்டீல் பிக்ஸ்சர்கள், பத்தாம் வகுப்புத் தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற உதவி சட்டரிங் கார்பென்ட்டர்கள், உதவி ஸ்டீல் பிக்ஸ்சர்கள் பெருமளவில் தேவைப்படுகிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் தகுதி, அனுபவத்துக்கு ஏற்ப, ஊதியத்துடன் இலவச விமான டிக்கெட், இருப்பிடம், மருத்துவக் காப்பீடு, மிகை நேர பணி ஊதியம் ஆகியவை வெளிநாட்டு வேலையளிப்போரால் வழங்கப்படும்.
மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள், நீலநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், 42, ஆலந்தூர் சாலை, கிண்டி, சென்னை-32. மேலும் விவரங்களுக்கு 044-22505886, 22502267 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லதுஜ்ஜ்ஜ்.ர்ம்ஸ்ரீம்ஹய்ல்ர்ஜ்ங்ழ்.ஸ்ரீர்ம் என்ற இணையதளத்திலும் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.