WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, August 25, 2014

FLASH NEWS:அரசுப்பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை

கல்வித்துறை இயக்குனர் நாளை ஆலோசனை
டிஇடி தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை சேர்ப்பதற்காக அரசுப் பள்ளிகளில் பாடவாரியாக உள்ள காலி இடங்களின் எண்ணிக்கை குறித்த முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது.

தமிழக அரசுப்பள்ளிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. காலாண்டுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் சில அரசுப்பள்ளிகளில் முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாததால் பாடம் நடத்துவதில் சிரமம் ஏற்படுகிறது.

இதனால் பொதுத்தேர்வை சந்திக்க உள்ள 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். எனவே காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு சமீபத்தில் நடந்த டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்று இறுதி பட்டியலில் இடம் பிடித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் பாடவாரியாக கணக்குகெடுக்கப்பட்டு இறுதி பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இது தொடர்பான ஆய்வு கூட்டம் பள்ளிக் கல்வி இயக்குனர் தலைமையில் சென்னையில் நாளை (26ம் தேதி) நடக்கிறது.

முதன்மைக் கல்வி அதிகாரிகளின் நேர்முக உதவியாளர்கள், அலுவலக கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உடனடியாக நிரப்ப வேண்டிய பணியிடங்கள் குறித்து கணக்கெடுக்கப்படுகிறது. இந்த நியமன நடவடிக்கையின் போது துறை தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் ஆய்வுக்கு எடுக்கப்பட உள்ளது.

மேலும் தரம் உயர்த்தப்படும் பள்ளிகள், இவற்றுக்கு தேவையான கூடுதல் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் குறித்த விவரங்களும் இக்கூட்டத்தில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது. எனவே விரைவில் புதிய ஆசிரியர்கள் நியமிப்பதற்கான உத்தரவு தகுதியானவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


8 comments:

  1. Good morning to all kalvikkuyil (KK) friends. இந்த வாரமாவது பணி நியமன தேதி அறிவித்தால் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும் கல்வித்துறையே நீங்கள் செய்வீர்களா???

    ReplyDelete
  2. Hai selva sir com,eco,phy selection list today varuvatharkku change erukka sir if u know plz post comend. Sir...

    ReplyDelete
    Replies
    1. Hi Mr Tharan நிச்சயம் இந்த வாரம் உங்கள் கேள்விக்கு பதில் தெரிந்து விடும் நண்பரே All the best.

      Delete
  3. ALL cv complete candidates job kodutha nalla irukum..bcoz all are same mark written exam last cut off..already one year over..ennai mathri irukara additional 120 post kodutha..all cv completed canditates life bright agum..TAMIL NADU CM AMMA Engalukum life kodukanum..plz consider .amma.

    ReplyDelete
  4. Paper 1 , SCA kku scagt-70.16 wt varaivarum. Scaw-68.60 wt varaivarum. This my guess

    ReplyDelete
  5. 1. Prince Gajendra babu
    Andru
    5% madhipen thalarvuku aadharavu
    in dru
    5%(82-89) madhipen thalarval velai kidaipavargaluku edhirpu
    2. Dhinathanthiyin uladhu ulabadi
    Nigalchi baadhikapatorai matumkondu nigalchi nadathuvadhu nadunilaiyatradhu
    3. Prince Gajendrababu
    Asiriar thagudhi thervaal thagudhiaana aasiriyargalai therndheduka mudiaadhu.
    4. Baadhikapatavargal
    Aasiriyar thagudhi thervaal matume thagudhiaana aasiriyargalai therndheduka mudiyum
    (Verubata karuthukal)
    Koodi pesi peti koduthal uthamam
    5. Neengalo naangalo
    Oruthar baadhikapataal dhaan
    inoruvaraal vetriyai adaiyamudium

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.