WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, September 13, 2014

"ஆசிரியர் தகுதிச் சான்றிதழை 22,000 பேர் பதிவிறக்கம் செய்யவில்லை'

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பேர்
இணையதளத்திலிருந்து தங்களது சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யவில்லை என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்கள் அனைவரும் வரும் 25-ஆம் தேதிக்குள் தங்களது தகுதிச் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் சலுகைக்குப் பிறகு 72 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர்.

மொத்தம் 72,888 பேருக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டன.

இந்தச் சான்றிதழ்களை மூன்று வாரங்களுக்குள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியது.

ஆனால், பத்து நாள்களில் 50,276 பேர் மட்டுமே சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியது:

ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் முதல் முறையாக இணையதளத்திலிருந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சான்றிதழ்களை 25-ஆம் தேதி வரை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். ஒவ்வொரு தேர்வரும் இரண்டு முறை மட்டுமே சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.

சான்றிதழ்களை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது தொடர்பாக செயல் விளக்கங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் தங்களது பதிவெண்ணை இணையதளத்தில் பதிவு செய்த பிறகு, சான்றிதழில் இடம்பெறும் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். அவற்றைச் சரிபார்த்தவுடன் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் பிரச்னை இருந்தால் ஆசிரியர் தேர்வு வாரியத்தை தொடர்பு கொள்ளலாம்.

சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்ய இயலவில்லை எனக் கூறி சுமார் 400 பேர் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் புகார் செய்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் செப்டம்பர் 22, 23 தேதிகளில் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்வது தொடர்பாக எஸ்.எம்.எஸ். மூலம் அறிவிக்கப்படும்.

இதுவரை 22,612 பேர் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யவில்லை. இவர்கள் அனைவரும் 25-ஆம் தேதிக்குள் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.


1 comment:

  1. ===============
    NOTE THIS POINT !!
    ===============

    (Real Seniors) : Those who got

    B.ed degree before 2005. Their

    age range is 32-42 or more....

    (Pseudo Seniors) : Those who studied

    B.ed after 2005. But they did their

    U.G degree 5 years to 10 years before

    2005.

    ================
    Senior Calculation !!
    ================

    Points

    1). The age of B.ed candidate should not

    determine his seniority. So mere (DOB)

    Date of birth should not be taken into

    account.

    2). The year he completed B.ed course

    should determine his seniority.

    Example : Vijay Vijay.

    1). He completed B.Sc Degree in 1998.

    (@ at the age of 20)

    2). Then he studied B.ed degree in 2010.

    (@at the age of 32)

    3). His age is now around 36.

    Conclusion : he is not a senior just

    because of his age 36. He is pseudo

    senior.

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.