WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, September 10, 2014

பொதுத்தேர்வில் அதிக மார்க் பெறும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான பரிசுதொகை ரூ.3ஆயிரமாக உயர்வு

ஆதிதிராவிட, பழங்குடி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த
முதலமைச்சரின் தகுதி பரிசு தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இன மாணவ, மாணவிகளில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு மாணவர்களில் 1000 பேருக்கும், மாணவிகளில் 1000 பேருக்கும் முதலமைச்சரின் தகுதி பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2011 & 2012ம் கல்வியாண்டு முதல் முதலமைச்சரின் கல்வி பரிசு தொகை தற்போது ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேற்படி திட்டத்தின் கீழ் பயனடைய 2014ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள அரசு பொதுத்தேர்வில் 12ம் வகுப்பில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண் மாணவர்களுக்கு 1200க்கு 1087, மாணவிகளுக்கு 1200க்கு 1101 ஆகும். இதில் தமிழை ஒரு பாடமாக கொண்டு பயின்றிருக்க வேண்டும்.

எனவே, மேற்படி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகள் பயனடையும் விதமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று கல்லூரியில் மேற்படிப்புக்கு சேர்ந்துள்ள தகுதியான மாணவ, மாணவிகளுக்கு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத் தலைவர்கள் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் இருந்து விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை மேற்படி அலுவலகத்தில் வருகின்ற 30ம் தேதிக்குள் சமர்பித்து பரிசு தொகையினை மாணவ, மாணவிகள் பெற்று பயனடையலாம்.


2 comments:

  1. PG asst potiyalarkal, CV mutithu eruthi pattiyalil etam peraathavar next exam Processla vaipu ketkalame? Bcs TET la pass aana, 7 yearsku processla iruku.PG cv mutithavarkaluku mattum 3 years avathu validity tharalame? 3 to 4 times patiyalai maatram seithu PG pottiyalar pathikapatullanar. KALVIKKUYIL sthaabanam itherku enna karuthu solla virumbugirathu?

    ReplyDelete
  2. PG asst potiyalarkal, CV mutithu eruthi pattiyalil etam peraathavar next exam Processla vaipu ketkalame? Bcs TET la pass aana, 7 yearsku processla iruku.PG cv mutithavarkaluku mattum 3 years avathu validity tharalame? 3 to 4 times patiyalai maatram seithu PG pottiyalar pathikapatullanar. Kalvikkuyil sthaabanam itherku enna karuthu solla virumbugirathu?

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.