ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் பாதிக்கப்பட்ட
பட்டதாரிகள், தங்கள் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு நேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். கடந்த ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட்டதில் சுமார் 60,000 பேர் பணி நியமனத்துக்கான தகுதியை இழந்துள்ளனர். அதனால் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டு பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் அரசுக்கு கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர். கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் இதுவரை முடிவுக்கு வரவில்லை. பட்டதாரிகள் ஒவ்வொரு நாளும் சென்னையில் முக்கிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தபிரச்னை குறித்த வழக்கில், பணி நியமனத்துக்கு மதுரை உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. அதற்குள் சிலருக்கு அரசு பணி நியமனம் வழங்கியுள்ளது. இது நீதிமன்றத்தை அவமதிப்பது போன்றது என்று பட்டதாரிகள் நேற்று முன்தினம் கருத்து தெரிவித்தனர். இதை பள்ளிக் கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள் விமர்சனம் செய்தனர். இதற்கு பட்டதாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் தங்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு நேற்று காலை டிபிஐ வளாகத்துக்கு வந்த 35 பட்டதாரிகள், டிஆர்பி முன்பு கோஷம் போட்டனர். உடனடியாக நுங்கம்பாக்கம் போலீசார் அவர்களை கைது செய்தனர். மாலை 5.30 மணி அளவில் அவர்களை விடுவித்தனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.