அரசு பள்ளிகளில் பணியாற்ற கலந்தாய்வில் உத்தரவு பெற்ற புதிய
ஆசிரியர்கள், வரும்8ம் தேதி பணியில் சேர வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில், கடந்த 30ம் தேதி முதல் நடந்து வருகிறது. முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில், திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்ற 26 ஆசிரியர்களுக்கும்; வெளிமாவட்டங்களில் பணியாற்ற 29 ஆசிரியர்களுக்கும் உத்தரவு வழங்கப்பட்டது.
இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, மாவட்ட கல்வி அலுவலர் கரோலின் தலைமையில் நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர்களுக்கு 61 பணியிடங்கள் காலியாக உள்ளன. நேற்றைய கலந்தாய்வில், திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரிய 51 இடைநிலை ஆசிரியர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டது. இன்று, பிற மாவட்டங்களில் உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு நியமன கலந்தாய்வு நடக்கிறது.அடுத்து, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது. பணி உத்தரவு பெறும் ஆசிரியர்கள், வரும் 8ம் தேதி, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளியில் பணியில் சேர வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.