கிருஷ்ணகிரி அடுத்த நாட்டான்கொட்டாய் அரசு உயர்நிலைப்பள்ளியில்,
போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாததால், மாணவர்கள், நெற்களத்தில் அமர்ந்து படிக்கும் அவல நிலை உள்ளது.
கிருஷ்ணகிரி அடுத்த நாட்டான்கொட்டாயில் செயல்பட்டு வந்த நடுநிலைப்பள்ளி, மூன்று ஆண்டுகளுக்கு முன், தரம் உயர்த்தப்பட்டது. இந்த பள்ளியில், நாட்டான்கொட்டாய், அவதானபட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, 170 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளி, நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வந்த இடத்திலேயே செயல்படுகிறது. இங்கு, மூன்று வகுப்பறைகள் மட்டுமே உள்ளதால், இரண்டு வகுப்பு மாணவ, மாணவியர் பள்ளிக்கு வெளியே உள்ள நெல் அடிக்கும் களத்தில் அமர்ந்து, படிக்க வேண்டிய நிலை உள்ளது.
இதற்காக, பள்ளிக்கு எதிரே அமைந்துள்ள மாரியம்மன் கோவில் சுவற்றில் கரும்பலகை செய்யப்பட்டு, அதன் எதிரே மாணவர்களை அமரவைத்து, பாடம் சொல்லி கொடுக்கப்படுகிறது. மேலும், இப்பள்ளி கட்டிடங்களுக்கு, சுற்றுவர் இல்லாததால், இரவு நேரத்தில், அந்த பகுதியை சேர்ந்த சிலர், பள்ளி வளாகத்துக்குள் அமர்ந்து, மது குடித்துவிட்டு அங்கேயே மது பாட்டில்களை வீசிச் செல்கின்றனர். பள்ளிக்கு காலையில் வரும் மாணவர்கள், மது பாட்டில்களை அப்புறப்படுத்துகின்றனர். மாணவர்களை, இதுபோன்ற வேலைகளை செய்யக்கோரியதால், அப்பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியையை மாற்றக்கோரி, சில நாட்களுக்கு முன், மாணவர்கள் பள்ளிக்கு வெளியே அமர்ந்து, தர்ணா போராட்டம் செய்தனர்.
இப்பள்ளியில் பணியாற்றி வந்த மூன்று ஆசிரியர்களை, "டெப்டேசன்'ல் வேறு பள்ளிக்கு மாற்றி விட்டதால், தற்போது இந்த பள்ளியில், நான்கு ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். இவர்களால், அனைத்து வகுப்புகளுக்கும், பாடம் எடுக்க முடியாத நிலை உள்ளது. மாணவர்களின் நலன் கருதி, நாட்டான் கொட்டாய் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு, கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை கட்டி தரவும், பள்ளியில் அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுச்சுவர் கட்டி தரவேண்டும் என, அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் பெற்றோர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.