WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, September 3, 2014

ஆசிரியர் பணி நியமனத்திற்கு தடை?

மதுரை: பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கு மதுரை
ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த தமிழரசன் மற்றும் 18 பேர் இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவில், கடந்த மே மாதம் 30ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இம்முறையை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, ஆசிரியர் தேர்வு வாரியம் கவுன்சிலிங் நடத்த தடையில்லை என்றும், பணி நியமனங்கள் வழங்கக்கூடாது என்றும் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.