WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, September 3, 2014

ஆசிரியர் பிரச்னையிலும் அலட்சியம்'!?

சென்னை: 'போராட்டம் நடத்தும் ஆசிரியர்களின் பிரதிநிதிகளை, உடனடியாக,
முதல்வர் அழைத்து பேசி, சுமூக முடிவு காண வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது அறிக்கை:ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில், கல்லுாரிகளில் பயிற்சி பெற்று தேர்வு எழுதி, வெற்றி பெற்றவர்களுக்கு, ஆசிரியர் பணிக்கான தகுதிச் சான்றை, தமிழக அரசு தந்துள்ளது. இவ்வாறு சான்றிதழ் கொடுத்தவர்களுக்கே, மீண்டும், ஒரு தகுதி தேர்வை நடத்துவது, ஏன் என, புரியவில்லை. 'வெயிட்டேஜ்' என்ற பெயரில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர்.ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற, கோரிக்கையை வலியுறுத்தி, நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட 4 பேர், குளிர்பானத்தில், பூச்சிக் கொல்லி மருந்தை கலந்து குடித்தனர். ஆசிரியர்களின் போராட்டம் பற்றி, அரசு இதுவரை, அக்கறை காட்டியதாக தெரியவில்லை. அனைத்து பிரச்னைகளிலும், அலட்சியம் காட்டுவது போல் இல்லாமல், ஆசிரியர் பிரச்னை, தலையானது என்பதை மனதில் கொண்டு, ஆசிரியர்களின் பிரதிநிதிகளை, முதல்வர் உடனடியாக அழைத்து பேசி, சுமூக முடிவு காண வேண்டும். இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.