WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, October 25, 2014

AN News:சென்னையில் டெங்கு காய்ச்சல் – மெட்ராஸ் ஐ நோய் வேகமாக பரவுகிறது!!

                                        சென்னையில் டெங்கு காய்ச்சல் – மெட்ராஸ் ஐ நோய் வேகமாக பரவுகிறது


சென்னை, அக். 25–

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இந்த தண்ணீரில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ், ஏஜிப்டி வகை கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

இதனால் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் 10 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவர்களில் 2 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். மீதி 8 பேர் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று டீன் விமலா கூறினார். மேலும் அவர் கூறும்போது, கடந்த ஆண்டுகளை விட டெங்கு பாதிப்பு குறைவுதான். பொது மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 10 படுக்கை வசதியுடன் தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களில் பெரும் பாலானவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே எண்ணிக்கை குறைவாக வெளியே தெரிகிறது.

டெங்கு பாதித்தவர்கள் முறையாக மருந்து மாத்திரைகளை சாப்பிட்டாலும் ஒரு வாரம் வரை காய்ச்சல் மற்றும் உடல் வலியால் அவதிப்படுகிறார்கள்.

சித்த மருத்துவமுறையில் உள்ள நிலவேம்புகுடிநீர் இதற்கு சிறந்த மருந்து என்று கூறுகின்றனர். நிலவேம்பு பொடியை வாங்கி கசாயம் காய்த்து வெறும் வயிற்றில் 30 மில்லி வீதம், 3 நாட்கள் குடித்தால் டெங்கு காய்ச்சல் வராது.

டெங்கு காய்ச்சல் பாதித்தவர்கள் ஒரு வேளைக்கு 60 மில்லி வீதம் தினமும் 2 வேளை குடிக்க வேண்டும். இவ்வாறு 7 நாட்கள் குடித்தால் காய்ச்சல் குணமாகி விடும் என்கிறார் இம்காப்ஸ் நிறுவன துணைத் தலைவர் டாக்டர் வேலாயுதம்.

மாமல்லபுரம் சுற்றுப்பகுதி கிராமங்களான கடம்பாடி, மணமை, காரணை, வடகடம்பாடி போன்ற கிராமப் புரங்களிலும் தொடர் மழை நின்றதும் சிறுவர்களுக்கும், முதியவர்களுக்கும் மூச்சு திணறலுடன் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.

மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் இதுவரை 100–க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளியாகவும், 30–க்கும் மேற்பட்டோர் உள்நோயாளியாகவும் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மழைக்காலமான இப்போது மெட்ராஸ் ஐ என்ற கண்நோயும் வேகமாக பரவுகிறது. எழும்பூர் கண் மருத்துவமனையில் தினமும் 50 பேர் கண்நோய்க்கு சிகிச்சை பெற்று செல்வதாக மருத்துவமனை இயக்குனர் டாக்டர் நமிதா புவனேஸ்வரி கூறினார்.

கோடை காலத்தில் நாள் ஒன்றுக்கு 15 பேர் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். மழை காலத்தில் இந்த எண்ணிக்கை 50 ஆக அதிகரித்து இருப்பது வழக்கத்திற்கு மாறாக இருப்பதாக டாக்டர்கள் கூறுகிறார்கள்.

வைரஸ் பாதிப்பால் ஏற்படும் இந்த கண்நோய் கண்ணின் கருவிழியை தாக்குகின்றன. இந்த வைரஸ்களின் பாதிப்புகள் 4 முதல் 5 நாட்கள் வரை இருக்கும். குறிப்பிட்ட இந்த வைரஸ்களின் பாதிப்பு மிக தீவிரமாக இருப்பதால் கண்நோய் வந்தால் ‘ஸ்டீராய்டு’ மருந்துகளை தவிர்த்து மருத்துவர்களை அணுக வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.